விடாமுயற்சி பொங்கலுக்கு தான் ரிலீஸா? இயக்குநர் கொடுத்த விளக்கம்!

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வருகிறதா இல்லையா என பெரிய குழப்பத்திற்கு அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் விளக்கம் தந்துள்ளார்.

vidamuyarchi pongal

சென்னை : அஜித் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தான் வருகிறதா?அல்லது மே மாதத்திற்கு தள்ளி செல்கிறதா? என அஜித் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். அதற்கு முக்கியமான காரணமே விடாமுயற்ச்சி படத்தின் ரிலீஸ் தேதி  முன்னதாக அவர் நடித்த மற்றோரு படமான குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகிவிட்டது.

அதனைத்தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி  படத்திற்கான டீசர் வெளியாகும்போது படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்தது. இதனால் ஒரே நாளில் இரண்டு அஜித் படங்களா? என ரசிகர்கள் குழப்பத்தில்  இருந்தார்கள். அதன்பிறகு குட் பேட் அக்லி படம் தான் மே மாதம் ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி எனவும் கூறப்பட்டது.

ஆனால், படத்தின் டீசர் வெளியானபோது மட்டும் தான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படம் பொங்கலுக்கு வருகிறது என அறிவித்தது. அதன்பிறகு படத்தில் இருந்து முதல் பாடல் வெளியானபோது கூட அதனை குறிப்பிட்டு சொல்லவில்லை. இதனால் திட்டமிட்டபடி விடாமுயற்சி படம் பொங்கலுக்கு தான் வருகிறதா? இல்லையா அதையாவது உறுதி செய்யுங்கள் என லைக்கா நிறுவனத்திடம் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்து வந்தனர்.

இந்த சூழலில், இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் அடுத்த படமான குட்  பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதி செய்தார். இது குறித்து பேசிய அவர் ” அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கும்? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் ” முதலில் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படம் வெளியாகிறது. அதனை முதலில் பாருங்கள். அந்த படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி படம் வரும்” எனவும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்