கைதி சிறை சாலையா..? இல்லை சொகுசு விடுதியா”..??அதிகாரி அலட்சியமா..!அனுமதியோடு அரங்கேறியதா..???

Default Image

புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில” கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை “வாழ்ந்தது தெரியவந்தது.இந்த சிறைகளில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

Image result for BED

இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த “டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுள்ளனர்”. சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Related image

மேலும் “சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறது காவல்துறை.

Related image

இதனிடையே இன்று  சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Image result for JAIL

அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்த காவல்துறைக்கு தெரியாத சிறைச்சாலையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை..!!சிறைக்குள் சொகுசு அனுபவித்த கைதிகளை பற்றி மக்களுக்கு தெரிந்தவுடன் சோதனை என்று 3 மத்திய சிறைக்கு கிளம்பிய காவல்துறை சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொருட்களை எப்படி அனுமதித்தது.சிறைச்சாலை என்பது செய்த குற்றத்திற்க்கான தண்டனையை அனுபவித்து அக்குற்றத் தவறிலிருந்து மனம் திருந்தி வாழவைப்பதாகும்.

ஆனால் தமிழக சிறைச்சாலையில் குற்றத்தை திருத்தி கொள்ள வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை கைதிகளுக்கு உருவாக்கியுள்ளது.

Related image

சிறை என்றால் ஒருவிதமான பயம் தோன்றும் எல்லோருக்கும் ஆனால் இன்று சிறைச்சாலை தானோ அங்கே  மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்கிலாம் என்று குற்றாவளிகள் கூறும் அளவிற்கு தமிழக சிறைகளின் அவலநிலைக்கு இதற்கு யார் காரணம் அலட்சிய அதிகாரிகளா..??அல்லது கைதிகளின் இந்த சொகுசு வாழ்க்கை அதிகாரிகளின் அனுமதியோடு அரங்கேறியுள்ளதா..??என்று மக்கள் காவல்துறையை கேள்வி என்னும்” சாட்டையால்” அடிக்கின்றனர். சாட்டையடிக்கு பதில் அளிக்குமா காவல்..??

Image result for KOVAI CENTRAL JAIL

 

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்