நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்… ‘அம்மன்’ உணவகத்தை மூடக்கோரி மனு.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியன் அம்மன் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்துள்ளார்.

soori amman hotel madurai

மதுரை: பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக ஜொலிக்கிறார். கடைசியாக விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கும் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு இவர் நடிப்பில் சிறந்து விளங்குவது போல், தொழிலிலும் சிறந்து விளங்குகிறார்.

நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகங்கள் பல்வேறு இடங்களில் ‘அம்மன்” உணவகம் என்ற பெயரில் ஓட்டல்களை நடத்தி வருகின்றன. மதுரையில் குறிப்பாக முக்கிய சந்திப்புகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், நரிமேடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதில், இப்பொது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியன் அம்மன் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி, “நடிகர் சூரியின் அம்மன் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப் பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24-06-2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை தமிழகத்தின் அமைச்சர். P.T.R. பழனிவேல்தியாகராஜன் துவக்கி வைத்தார்.

பொதுப் பணி துறையினரால் மேற்கண்ட உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்க பட்டுள்ளது. ஆனால், இந்த அம்மன் உணவக நிர்வாகத்தினர் செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைந்திலுள்ள இடத்தில் நிர்ணயிக்க பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.

இங்கு அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்க்க்குகளின் நடுவேதான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உனாவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடத்து வருகின்றன. மேலும் தீவிர தொற்று நோயை உண்டாக்கும் நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், காப்பான் பூச்சிகள் பல்லாயிர கணக்கில் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது.

செவிலியர் விடுதிக்கு காட்டோட்டம் சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக உரிமையாளர்கள் மினரல்வாட்டர் கேள்கள்நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதால் அங்கு தங்கியிருக்கும் செவிலியர் மற்றும் செவிலிய ஆசிரியைகள் சூரிய ஒளி, காற்றோட்டம் வரும் வகையில் ஜன்னலை திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். இதனால் அங்கு தங்கி உள்ள செவிலிய மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்த அம்மன் உணவகத்தின் வெகு அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இந்த உணவு வகைகளை வாங்கி உண்டு வருகிறார்கள்.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே உதவி நிலைய மருத்துவ அலுவலர் அவர்களிடம் புகார் தெரிவித்தேன். இதுவரை மேற்கண்ட அம்மன் உணவாக உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சுகாதாரமற்ற முறையிலும் தாமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் மேற்கண்ட உணவகத்தில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க பொதுநலன் கருதி கேட்டு கொள்கிறேன்” இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்