விஜய் – ஆளுநர் சந்திப்பு.! அண்ணாமலையின் ஆதரவும்., வன்னிஅரசின் விமர்சனமும்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது வரவேற்கதக்கது என அண்ணாமலை பதிவிட்டுள்ளார். விசிக வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.

Vanniyarasu VCK - TVK Vijay - Governor RN Ravi - Annamalai BJP

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு இன்று காலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளும் அரசை விமர்சித்தும், பெண்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியிருந்தார்.

இதனை அடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் இன்று பகல் 1 மணியளவில் சென்னை ராஜ்பவனில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பில்,  3 பக்கம் கொண்ட மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டுள்ளதாக தவெக தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை ஆதரவு :

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயின் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், ” அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும்,
தமிழக பாஜக  தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இன்றைய தினம், தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார் .

வன்னிஅரசு விமர்சனம் :

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது சமூக வலைதளத்தில் விஜய் – ஆளுநர் சந்திப்பை கடுமையாக விமார்சனம் செய்துள்ளார். அவர் பதிவிடுகையில், ” ஆளுனரை சந்தித்து முறையிடுவதை அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.

இப்போது தவெக தலைவர் விஜயை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவியை விஜய் 15 நிமிடம் சந்தித்தார்.
ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் (Elite) அரசியல்.” என விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்