வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

அண்ணா பல்கலைகழக வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AnnaUniversity

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதோடு, பல கேள்விகளையும் எழுப்பி கொண்டு வருகிறது. அதன்படி, இந்த வழக்கில் இன்றும் கேள்விகளை அடுக்கி உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த வழக்கில், மாணவி தவறு செய்தது போல் எப்ஐஆர் போடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் மோசமான முறையில் எப்ஐஆர் உள்ளதாகவும், வாக்குமூலம் பெறும்போது காவல் அதிகாரிகள் உதவி செய்ய முடியாதா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும், பாதிக்கப்பட்ட நபரின் அடையாளங்களைக் காப்பது காவல்துறையின் கடமை, அதை தவறியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi