ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் நியூயார்க்கில் நடைபெற்று வரும் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

MAGNUS CARLSEN

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆடைக் குறியீட்டை மீறியதற்காக, நியூயார்க்கில் நடந்த உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகினார்.

2-ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது, அதற்கு இணங்க மறுத்து, பிளிட்ஸ் பிரிவில் இருந்து விலகினார். ஜீன்ஸ் அணிந்து வந்த மேக்னஸ் கார்ல்சன் ரேபிட் பிரிவின் 9வது சுற்றில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், சாம்பியன்ஷிப்பின் பிளிட்ஸ் பிரிவில் பங்கேற்கப் போவதில்லை என்று கார்ல்சன் அறிவித்தார். இது தொடர்பாக நோர்வே ஒலிபரப்பாளர் NRK உடன் பேசிய கார்ல்சென், “நான் FIDE இல் மிகவும் சோர்வாக இருக்கிறேன், அதனால் எனக்கு இது எதுவும் வேண்டாம். அவர்களுடன் எனக்கு எதுவும் வேண்டாம்” என கூறியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) இந்த முடிவை விளக்கி தனது சமூக வலைதளத்தில், “இந்த முடிவு பாரபட்சமின்றி எடுக்கப்பட்டது. இது அனைத்து வீரர்களுக்கும் சமமாக பொருந்தும். விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதும், அவர் அக்கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்றொரு பங்கேற்பாளரான இயன் நெபோம்னியாச்சியும் விளையாட்டுக் காலணிகளை அணிந்து ஆடைக் குறியீட்டை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு இணங்கிய அவர் அதனை மாற்றிக் கொண்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினார்” என்று கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்