முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

mk stalin manmohan singh

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க தலைவர் விஜய், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்திருந்தார்கள்.

தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி இருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தன்னுடைய அஞ்சலியை செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பிறகு மன்மோகன் சிங் குடும்பத்தினருடன் பேசி அவர்களுக்கு ஆறுதல்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். அஞ்சலி செலுத்துவிட்டு சென்ற பிறகு ” மன்மோகன் சிங் மறைவு என்பது வேதனை அளிக்கிறது. அவருடைய மறைவு இந்தியாவிற்கே பெரிய இழப்பு. தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை வசதிக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். அதைப்போல 100 நாள் வேலை திட்டத்தையும் கொண்டு வந்தவர் அவர் தான்” எனவும் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்