பாக்சிங் டே டெஸ்ட் : தடுமாறும் இந்திய அணி! முன்னேறும் ஆஸ்திரேலியா!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்த 164 ரன்கள் சேர்த்துள்ளது.
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி.
2ஆம் நாள் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, 10 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியினர் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து, 310 ரன்களுக்கு பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறையும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 82, கோலி 36, ராகுல் 24 ரன்கள் சேர்த்துள்ளனர்.
இதனால், ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வேண்டும் என்றால், அடுத்தடுத்த நாட்களில் இந்திய அணி வீரர்கள் அவுட் ஆகாமல், அதிக ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்நிலையில், வருகின்ற மூன்று நாளும் வெற்றி பெரும் முனைப்புடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.