‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது! வைப் செய்யும் ரசிகர்கள்…

அஜித்தின் விடாமுயற்சி பட முதல் சிங்கிளான 'சவதீகா' பாடலில், வைரல் வசனமான 'இருங் பாய்' இடம்பெற்றுள்ளது.

Sawadeeka - VidaaMuyarchi

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று கிறிஸ்மஸ் தினத்தன்று அறிவித்தனர். அதன்படி, முதல் பாடலான “Sawadeeka” என்கிற பாடல் வெளியாகியுள்ளது.

தற்போது, எம்பி 3 வடிவில் ஆடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, கானா, ஆப்பிள் மீயூசிக், ஸ்பாட்டிபை, அமேசான் உள்ளிட்ட இணையத்தளங்களில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

நாட்டுப்புற இசைப் பாடகர் ஆண்டனி தாசன் தான் பாடியுள்ள இந்த பாடலை பாடலசிரியர் தெருக்குறள் அறிவு எழுத, அனிருத் இசையி, செம்ம  குத்து பாடலாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, பாடலில், வைரல் வசனமான ‘இருங் பாய்’ இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தில் அஜித் – திரிஷாவை தவிர, நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா, எதிர்மறையான வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, லைகா தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்