மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

pays last respects to former PM Dr Manmohan Singh

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார். நேற்று இரவு மறைந்த மன்மோகன் சிங் உடல், இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலிக்கு பின், நாளை(டிச.28) பிற்பகல் மன்மோகன் சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது உடலுக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி திய வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், முதலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மன்மோகன் சிங்  உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல் காந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அதற்கு முன்னதாக, அஞ்சலி செலுத்திய சோனியா காந்தி, கார்கே, பிரியங்கா ஆகியோர் மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில், மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9:30 மணி அளவில் டெல்லி புறப்படுகிறார். அவருடன் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். அதேபோல், காங்கிரஸ், அதிமுக, பாஜக தலைவர்களும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்