நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Jasprit Bumrah

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அருமையாக பந்துவீசி மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்திய காரணத்தால் அவருடைய புள்ளிகள் உயர்ந்து இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 904 புள்ளிகளைப் பெற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில் உள்ள ககிசோ ரபாடாவை (856) விட 48 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். அதே சமயம், முதலிடத்தில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிசந்திரன் அஸ்வின் தான் இருக்கிறார். கடந்த 2016 -ஆம் ஆண்டு  மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டுக்குப் பிறகு இந்த சாதனையை அஸ்வின் படைத்தார்.

அஸ்வினை விட அதிகமான ரேட்டிங்கை பெறமுடியவில்லை என்பதால் பும்ரா அஸ்வின் சாதனையை சமன் செய்து அவருடன் முதலிடத்தில் இருக்கிறார். மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டிலும் இதைப்போல அவர் சிறப்பாக செயல்பட்டார் என்றால் நிச்சயமாக ரவிசந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் இதுவரை பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது, பந்துவீச்சு தரவரிசையில் தனது முன்னிலையை 48 ரேட்டிங் புள்ளிகளாக உயர்த்த அவருக்கு உதவியுள்ளது. பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ககிசோ ரபாடா (856) இரண்டாவது இடத்திற்கும், ஜோஷ் ஹேசில்வுட் (852) மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்