INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?
இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடரில் 1 போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து , 4 -வது போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
இந்த போட்டியில் விளையாடி வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், 4-வது போட்டியில் அதிரடி மாற்றமாக இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் பழையபடி ஓப்பனிங்கில் இறங்கி விளையாட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் போட்டியை விளையாட தவறவிட்ட ரோஹித் சர்மா இரண்டாவது போட்டி நடைபெற்றபோது தான் அணிக்கு திரும்பினார்.
தனிப்பட்ட காரணமாக அவர் தாமதமாக அணிக்கு திரும்பிய காரணத்தால் அவர் ஓபனிங் இறங்கினால் செட் ஆகாது என்பதால் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழு ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 2-வது போட்டியிலும், 3-வது போட்டியிலும் ரோஹித் சர்மா நம்பர் 6-ல் தான் பேட்டிங் செய்தார். ஆனால், நம்பர் 6 இடம் அவருக்கு ராசியான ஒரு இடமாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், 2-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களும், 3-வது போட்டியில் 10 ரன்கள் என குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவருடைய பேட்டிங் பார்ம் குறித்த விமர்சனங்களும் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் ரோஹித் பழைய படி விளையாடினாள் மட்டும் தான் நடக்கும் என ரசிகர்கள் அதற்காக காத்துள்ளனர்.
இந்த நிலையில், நமக்கு மிடில் ஆர்டர் செட் ஆகவில்லை ஓப்பனிங் இறங்கி விளையாடி பார்ப்போம் என முடிவு செய்து ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அணியின் பயிற்சியாளர்களும் அது சரியாக இருக்கும் என திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்கி விளையாடினார் என்றால் கே.எல்.ராகுல் நம்பர் 3 இடத்தில் இறங்கி விளையாடுவார் என கூறப்படுகிறது.