எறும்புகளுக்காக வளைந்து கொடுத்த சிவபெருமான்.. ஆச்சரியமூட்டும் திருத்தலம் எங்க இருக்கு தெரியுமா?.
எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
திருத்தலம் அமைந்துள்ள இடம்;
திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு காலை 6மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும். மிகச்சிறிய உயிரினங்களான எறும்புகள் வணங்குவதற்காக மண்புற்று வடிவில் தன்னை சிவபெருமான் மாற்றிக்கொண்ட சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்குகின்றது .
முற்றிலும் கற்களால் ஆன கருவறை கொண்ட இந்த திருத்தலத்தில் எறும்புகள் ஊறுவதற்கு வடபுறம் சாய்ந்தபடி சிவபெருமான் அமைந்துள்ளார் .மேலும் லிங்கத்தின் மீது ஊர்ந்த எறும்புகளின் அடையாளத்தை இன்றும் தெளிவாக பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. முதல் கர்மயோகி ஆன சூரியன் தனது இரு மனைவிகளுடன் இயல்பாக அமைந்துள்ள இடமும் இதுதான்.
இக்கோவிலுக்கு முதலாம் ஆதித்த சோழன்,சுந்தர சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜராஜன் போன்ற சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டுகளில் குறிப்பிட பட்டுள்ளது. கிபி 1752 இல் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சு படையினருக்கும் நடந்த போரில் போர்க்களத்திற்கு இடைப்பட்ட இடமாக விளங்கியுள்ளது.
மதில் சுவரில் மிகப்பெரிய நந்திகள் அமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் கரும் கல்லால் ஆன வேலைபாடுகளை கொண்டுள்ளது. தேவர்களும் தேவர்களுக்கு தலைவரான இந்திரனும் இங்கு வந்து வழிபட்டதாக திருநாவுக்கரசர் தனது பாடலில் பாடியுள்ளார். இதற்கென புராண கதைகளும் சொல்லப்படுகிறது.
தல வரலாறு;
தாரகாசுரன் தேவர்களை துன்புறுத்தியதால் நாரத முனிவரின் அறிவுரையின்படி தேவர்கள் திருச்சி மலைமீது உள்ள ஈசனை வணங்குமாறு கூறுகின்றார் . அப்போது அரக்கன் அறியாதபடி தேவர்கள் எறும்பு வடிவில் மாரி சிவனை வழிபடச் சென்றுள்ளனர். மலை மீது சென்று ஈசனை வழிபட எறும்புகள் சிரமப்பட்டதால் சிவபெருமான் புற்று வடிவில் தன்னை மாற்றிக்கொண்டார் .இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.அதுமட்டுமல்லாமல் புற்றில் நீர் படாமல் பாதுகாக்க படுகிறது.
இங்குள்ள அம்மன் நறுங்குழல் நாயகி என அழைக்கப்படுகிறார் .இவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும் என நம்பப்படுகிறது. நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிவடப்படுகிறது .இதனை கருவறைக்குள் சென்று எறும்புகள் ஊர்ந்து எடுத்துச் செல்வது சிவபெருமானே ஏற்றுக்கொள்கிறார் எனவும் நம்பப்படுகிறது.