தரையிறங்கியபோது வெடித்து சிதறிய விமானம்… 72 பயணிகளின் நிலை என்ன?

72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் சிதறியது.

plane crashed in Kazakhstan

கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது.

க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR  என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் சிதறியது.

இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. விமானத்தில் பயணம் செய்த 72 பேரின் நிலைமை என்னெவென்று இனிமேல் தான் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்