அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை! ஒருவர் கைது!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 பேர் மாணவனை கடுமையாக தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமை , பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், வளாகத்தில் பணிபுரியும் காவலாளிகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மனரீதியில் பாதிக்கப்பட்டுவிட கூடாது என கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றொரு நபரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என பலர் தங்கள் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.