ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீன், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொது வரை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அதாவது பாகிஸ்தான் தலிபான் ஆப்கானிஸ்தான் மீது, நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
லாமன் உட்பட ஏழு கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஒரு பயிற்சி நிலையமும் அழிக்கப்பட்டது மற்றும் சில கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது.