“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்திய நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் டைட்டில் டீசர் வெளியானது.
ஆம், சூர்யா நடிக்கும் 44வது படத்திற்கு “ரெட்ரோ” என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது படத்தில் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் டீசர் பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கிறது என்றே சொல்லலாம். சொல்ல போனால், சூர்யாவின் பழைய படமான, ஆறு, சில்லனு ஒரு காதல், அயன் உள்ளிட்ட படத்தில் பார்த்த சூர்யாவை போல், இந்த படம் ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படமாக தெரிகிறது.
டைட்டில் டீசரை பார்க்கும் பொழுது, சூர்யா காதலுக்காக தன்னை சீர்திருத்திக்கொள்ளும் ஒரு நல்ல மனிதனாக காட்டப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டேயுடம் காதலுக்காக, கோபம், வன்முறை, தந்தை தொழில் இதுபோன்ற தீமைகளை கைவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதிலும், “என் பிறப்புக்கான purpose, இனி காதல்… பரிசுத்த காதல்”சூர்யாவின் வசனம் அவருக்கு நன்றாக பொருந்துகிறது.
மொத்தத்தில், அசுரத் தனமாக இருக்கும் சூர்யாவை காதல் வழியில் சாந்தமாக மாற்றுகிறார் பூஜா ஹெக்டே. இதனை வைத்து பார்க்கையில், சூர்யாவின் லுக்காக இருக்கட்டும், ஸ்லாங் ஆக இருக்கட்டும் மொத்தமாக மாறி வித்தியாசமான கண்டிப்பா ராவான ஆக்சன் படமா வரும் போல தெரிகிறது.
ரெட்ரோவை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், படம் 2025 கோடையில் திரையரங்குகளில் வரும் என்று கூறப்படுகிறது.