மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

INDWvsWIW

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து, நேற்று 2-வது ஒரு நாள் போட்டி வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி,  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அடுத்த ஒருநாள்போட்டி இதே கோடாம்பி மைதானத்தில் டிசம்பர் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி பெறுமா அல்லது, இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுதாக கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்