உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
முதற்கட்ட தகவலில், லிப்ட் ஷாஃப்டில் அதிக வெப்பம் கொண்ட கேபிளால் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது. உலகின் மிகவும் பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரத்திற்கு தினமும் சுமார் 15,000 முதல் 25,000 பார்வையாளர்கள் வந்து செலகின்றனர்.
இந்த நிலையில், தீ விபத்து சம்பவத்தை அடுத்து ஈபிள் கோபுரத்திற்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.