LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்கு பராமரிப்பு கட்டண உயர்வு வரை இன்றயை நாளின் முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியயிட்டது. ஏசி அல்லாத திரையரங்குகளில் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கட்டண உயர்வு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.