பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது மனைவி ஷாலினியும் கலந்து கொண்டனர்.

Ajith Kumar PV Sindhu Wedding

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் ஆகியோர் கடந்த டிசம்பர் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவரது திருமணம்மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து – வெங்கட தட்சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அட ஆமாங்க… இதில் பல திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் அஜீத்தின் வருகை தான்.

பொதுவாக எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நடிகர் அஜித், பி.வி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தனது படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளமாட்டார் நடிகர் அஜித்குமார்.

இப்படி இருக்கையில், பி.வி சிந்துவின் வரவேற்பு விழாவில் நடிகர் அஜித் தனது பேவரட் கோட் சூட்டில் செம ஸ்டைலாக தனது குடும்பத்தினருடன் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார். மேலும் இவ்விழாவில் சிரஞ்சீவி, அஜித் மிருணாள் தாக்கூர், ரோஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்