5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
கேரளா, ஒடிசா, பீகா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில், அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு, ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தற்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Governor of several states changes in one day … #governor #odishagovernor #governorlist #PoliticsLive #GazaGenocide #ManipurUpdate #Mizoram pic.twitter.com/FJfPtZXtBf
— Ayush lenka (@sanatan_Ayush) December 24, 2024