மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 24) பிற்பகல் 1:30 மணிக்கு வதோதராவில் புதிதாக கட்டப்பட்ட கோடாம்பி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் 2வது ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியை தக்க வைக்கும் நோக்கத்துடனும், மேற்கிந்திய தீவுகள் அணி எப்படியாவது வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும், வெற்றியை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றயை போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
இந்திய மகளிர் அணி:
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில், ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சைமா தாக்கூர், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங், பிரியா மிஸ்ரா, உமா செத்ரி, மின்னு மணி, தேஜல் ஹசாப்னிஸ், தனுஜா கன்வார் ஆகியோர் உள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி:
கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான அணியில், கியானா ஜோசப், ரஷாதா வில்லியம்ஸ், டியான்ட்ரா டோட்டின், ஷெமைன் காம்பெல்லே, ஆலியா அலீன், ஷபிகா கஜ்னபி, ஜைடா ஜேம்ஸ், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக், ஷாமிலியா கானல், சினெல்லே ஹென்றி, மாண்டி மங்க்ரு, அஷ்மினி முரிஸ்ஸானிஸ்ராஃப்ட் ஆகியோர் உள்ளனர்.
இதில், 11 பேர் கொண்ட இரு அணி வீரர்களின் பட்டியல் டாஸ் போடும் சமையத்தில் அறிவிக்கப்பட்டும் .