கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரி வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது .இதனை வரவேற்கும் விதமாக டிசம்பர் 1ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடுகளில் ஸ்டார் வைப்பது மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ வைப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றனர் . மாட்டுத் தொழுவத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என வரலாறு கூறுகின்றது . அப்படி அவர் இந்த உலகில் அவதரித்த போது ஒரு நட்சத்திரம் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அந்த நட்சத்திரத்தை குறிக்கும் விதமாகத்தான் வீடுகளில் ஸ்டார் வைக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் மரம் வைக்க காரணம்;
ஒன்றாம் நூற்றாண்டில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார்.. நான்காம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே டிசம்பர் மாதத்தில் பசுமையான மரத்தில் அலங்காரம் செய்து வழிபடும் வழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு ;
கிறிஸ்து பிறந்து 250 வருடம் கழித்து சாண்ட் நிக்கோலஸ் என்பவர் பிறந்துள்ளார். இவரே சாண்டா குலோஸ் என்றும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் அழைக்க படுகிறார் .இவர் மிகுந்த இரக்கம் உள்ளவராகவும் ,குழந்தைகள் மீது மிகுந்த அன்பு உள்ளவராகவும் வாழ்ந்திருக்கிறார். மேலும் கடவுளுக்கு ஊழியம் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது .தேவாலயத்திற்கு வரும் குடும்பங்களின் துயரங்களை அறிந்து கொண்டு தனக்கு வரும் பொன் ,பொருட்களை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் குணம் படைத்தவராக இருந்திருக்கிறார். தன் இறப்பு வரைக்குமே மற்றவர்களுக்கு கொடுத்தே வாழ்ந்து இருக்கிறார். இவர் இறந்த தினம் டிசம்பர் 6 என சொல்லப்படுகிறது.
சாண்ட் நிக்கோலஸ் அவர்களின் நல்ல குணத்தை போற்றும் விதமாக ஈரோப்பில் டிசம்பர் 6 நினைவு தினமாக கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறது . 1800 களில் இருந்து வருடம் முழுவதும் நல்ல விதமாக நடந்து கொள்ளும் குழந்தைகளுக்கு சாண்டா குலோஸ் பரிசளிப்பார் என பிரபலமாக ஆரம்பித்தது .தேவாலயத்தில் இவரது பெயரை சின்டர் கிளாஸ் என அழைத்தனர். இதுவே பின்னால் சாண்டா குலோஸ் ஆக மாறியது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினமாகவும் , டிசம்பர் 6 சாண்டா குலோஸ் நினைவு தினமாக இருப்பதாலும் , இவை இரண்டும் ஒரே காலகட்டத்தில் வருவதால் கிறிஸ்துமஸ்க்கு சாண்டா குலோஸ் கிறிஸ்மஸ் தாத்தாவாக வந்து பரிசளிப்பதாக கூறப்படுகிறது.
2000 வருடங்களுக்குப் பிறகும் தற்போதும் வரலாற்றில் கொண்டாடப்படும் சாண்டா குலோஸ் ஒரு அரசனோ அல்லது விஞ்ஞானியோ அல்ல .ஒரு சாமானிய மனிதராக வாழ்ந்து இளகிய மனமும் ,சிறந்த குணமும், மற்றவர் துயரில் உதவும் நல்ல உள்ளத்துடன் வாழ்ந்ததற்காகவே வரலாறு அவரை கொண்டாடுகின்றது .இப்படி மனிதர்களுக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த உன்னதமான செயலாக கூறப்படுகிறது. மேலும் உலகத்தில் அதிக மக்கள் கொண்டாடப்படும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் சொல்லப்படுகிறது.