மகாராஜா வசூலை மிஞ்சிய விடுதலை 2 ! மூன்று நாட்களில் இவ்வளவா?
விடுதலை 2 திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை போல பெரிய ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு இரண்டு தரமான படைப்புகளாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் அமைந்துள்ளது.
ஏற்கனவே, மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பேராதரவு பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு தரமான படைப்பாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து அதே போலவே விடுதலை 2 படத்திற்கும் மக்களுக்கு மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்துகொண்டிருக்கும் சூழலில், வசூலிலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகமான வசூலை செய்துள்ளது.
இதைப்போலவே, மகாராஜா திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 9 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது. விடுதலை 2 படம் அதனை விட அதிகமான வசூலை செய்துள்ளது. ஆனால், அதே சமயம் மகாராஜா படத்திற்கு வெளியான முதல் சில நாட்களில் வரவேற்பு குறைவாக கிடைத்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் தாறுமாறாக உயர்ந்தது. அதைப்போலவே விடுதலை 2 படமும் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.