கோலாகலமாக நடந்த பிவி சிந்து திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வேங்கட சாய் தத்தா என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார்.
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிவி சிந்து திருமணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்மிண்டன் வீராங்கனை பிவிசிந்து போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் வெங்கடா தத்தா சாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கும் எனவும், டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, இருவருடைய நிச்சியதார்தம் டிசம்பர் 14 அன்று நடைபெற்ற நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆடம்பரமான ராஃபிள்ஸ் உதய்பூர் ரிசார்ட்டில், பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
கலந்துகொண்ட பிரபலங்கள்
இந்த ஜோடியின் திருமணமானது அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு தனிப்பட்ட, நெருக்கமான கொண்டாட்டமாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். சச்சின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இதுவரை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மட்டுமே வருகை தந்து மணமக்களை வாழ்த்தியதாக தெரிகிறது.
ரசிகர்கள் வாழ்த்து
இருவருக்கும் திருமணம் முடிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பிவிசிந்துவுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
யார் இந்த வெங்கடா தத்தா சாய்
பிவி சிந்து திருமணம் செய்துகொண்டுள்ள வெங்கடா தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜிடி வெங்கடேஷ்வர் ராவின் மகன் தான். இவர் தற்போது டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
ஃபிளேம் யுனிவர்சிட்டி இளங்கலை வணிக நிர்வாகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பிபிஏ பட்டமும், பெங்களூரில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.