பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் நடந்த விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமடடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு விமானம் பல கட்டிடங்களில் மோதியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் சேதமும் அடைந்தது.
மோதலின் போது ஏற்பட்ட தீயினால் புகையை உள்ளிழுத்து பலர் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதாக தேசிய சிவில் பாதுகாப்புத் துறை தகவலை தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்தவர்கள் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். விமானத்தில் 10 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உயிரிழந்தவர்கள் அனைவரும் பயணிகளா அல்லது தரையில் இருந்த நபர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஆங்கிலம் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது.
இந்த சோகமான சம்பவம் தெற்கு பிரேசிலில் உள்ள சிறிய ஆனால் பிரபலமான ரிசார்ட் நகரமான கிராமடோவை உலுக்கியது.விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடந்து முடிந்த பிறகு விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.