‘மகாராணி’ ஸ்மிருதி மந்தனா… மகளிர் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை.!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் .
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. அதிலும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2024இல் மொத்தம் 1,602 ரன் விளாசி, அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட் 1593 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஸ்மிருதி மந்தனா இதற்கு முன், 2018-ஆம் ஆண்டில் 1291 ரன்களும், 2022-ஆம் ஆண்டில் 1290 ரன்களும் எடுத்திருக்கிறார். இந்த வருடம் 1602 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டில் அதிக ரன் அடித்தவர் (1602) என்ற சாதனையை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனாவை, போற்றும் வகையில் மகளிர் ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணி ஸ்ருதி மந்தனாவை ‘மகாராணி’ போல சித்தரித்து புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஸ்ருதி மந்தானா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 28 வயதான ஸ்ருதி மந்தானா, இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 193 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார்.
2018இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிதாலி ராஜ் 192 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இப்போது அதனை ஒரு ரன் வித்தியாசத்தில் ஸ்ருதி மந்தானா முந்தியது குறிப்பிடத்தக்கது.