மாதந்தோறும் பணம் அனுப்பிய அரசு… சன்னி லியோன் – ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!

சன்னி லியோன் - ஜானி சின்ஸ் பெயரில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Sunny Leone shony sins scam

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை ‘சன்னி லியோன்’ பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு’ நிதி உதவித்திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதைப் போல, சத்தீஸ்கர் மாநில அரசு அம்மாநில கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவி தொகையாக ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ (Mahtari Vandana Yojana) என்கிற திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் தான், அந்த நபர் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனை பலர் மோசடியாக பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சன்னி லியோன் பெயரிலும் ஒருவர் கணக்கு வைத்திருக்கிறார்.

அதில், அவரது கணவர் பெயர் ‘ஜானி சின்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆம், இணையதளத்தில் MVY006535575 என்ற பதிவு எண்ணை உள்ளிடும்போது, ​​பயனாளியின் பெயர் சன்னி லியோன் என்றும், அவரது கணவரின் பெயர் ஜானி சின்ஸ் என்றும் காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடப்பதாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஹரீஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், இத்திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கிய வந்த தொகையைத் திரும்பப் பெற முயலாது என்பதால், இதில் மோசடி செய்யும் நபர்கள் மீதான குற்றச்சாட்டின் பேரில், எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்