Live – புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!
வானிலை தொடர்பான தகவல் முதல் அமித்ஷா புதிய சுங்கச்சாவடி விவகாரம் வரை இன்றயை நாளின் முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தை அடுத்து கடலூர் – சிதம்பரம் இடையே தனியார் பேருந்து சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் வெளியாகும் வரை காத்திருக்கவும்.