மீண்டும் திரும்புகிறது மழை… டிச.24,25-ல் எங்கெல்லாம் கனமழை?
தமிழகத்தில் 24, 25ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய தினப்படி ஒரே இடத்தில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (டிச,24) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தின வானிலை கணிப்பின் படி, நாளை (டிச,24) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போல், நாளை மறுநாளும் (டிச,25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.