ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

BusDriver

சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன.

ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை ஒரு அதிரடி உத்தரவை வெளிட்டுள்ளது.

அதன்படி, அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவர். இது தொடர்பாக, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக, செல்போனை பயன்படுத்தியபடி பேருந்து இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோக்கள் வெளியாவதை அடுத்து போக்குவரத்துத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்