குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? இ.பி.எஸ். கண்டனம்.. அரசு விளக்கம்!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Edappadi K Palaniswami - TN Fact Check

சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை என்ற ஒரு செய்தி சமூக வளைத்ததில் பரவி வந்தது.

இதனையடுத்து, குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை என எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார். மேலும் இதற்கு, திமுக அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் கண்டனம் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், 2025ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று பரப்பப்படுவது வதந்தி என்றும், ஆனால், 2025ஆம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்.

ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. முன்னதாக, இந்த ஆண்டு (2024) அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. 2025ஆம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது

இனி 2026ஆம் ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்