பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்ததையடுத்து இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் அளித்துள்ளார்.

Nirmala Sitharaman POPCORN

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர்.

இதில், குறிப்பாக பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்தது அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, பாப்கார்னின் பல்வேறு பண்புகள் மற்றும் தயாரிப்பு முறைகளில் இருந்து வரி வேறுபாடுகிறது என்று கவுன்சில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சாதாரணமாக பேக் செய்யப்படாத உப்பு மசாலா கலந்த பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரியும், பேக் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12% ஜிஎஸ்டியும், சாக்லேட் பாப்கார்ன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, பாப்கார்ன்களுக்கு ஜிஎஸ்டி வரி பரிந்துரை செய்த நிர்மலா சீதாராமனை, நெட்டிசன்கள் பாப்கார்னை வைத்து விவாதத்தை எழுப்பியதோடு, மீம்ஸ்களை பரப்ப தொடங்கினர்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளிக்கையில், கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில், அவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சாதாரண பாப்கார்ன், உப்பு வகை உணவுகளில் (Namkeen) வருவதால் 5% வரியும், அதுவே பேக்கேஜ் செய்யப்பட்டதாக இருந்தால் 12% GST வரியும் விதிக்கப்பட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த வரி சிக்கல்கள் குறித்து கூடுதல் தெளிவுபடுத்தும் வகையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) விரைவில் ஒரு சுற்றறிக்கையை வெளியிடும். இது தொடர்பான ஆலோசனை ஜனவரி மாதம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்