தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்தார். அது என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்...
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
இதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 77 ரன்கள் எடுத்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். அது என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்…
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், மந்தனா 193 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், மிதாலி ராஜ் 192 ரன்களை எடுத்த சாதனை முந்தி புதிய சாதனையை படைத்திருக்கிறார். முன்னதாக, 2018இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் மிதாலி ராஜ் 192 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இப்போது அதனை ஒரு ரன் வித்தியாசத்தில் முந்திருக்கிறார்.
இந்த ஆண்டு அதிகம் அதிகம் ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும், ஸ்மிருதி மந்தனா படைத்திருக்கிறார். முன்னதாக 21 போட்டிகளில் 720 ரன்கள் எடுத்த இலங்கை கேப்டன் சாமரி அதபத்து தான் அந்த சாதனையை வைத்து இருந்தார். தற்போது 763 ரன்கள் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்தது இருக்கிறார்.
அதைப்போல, டி20 போட்டிகளில் ஒரு வருடத்தில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். கடந்த ஆண்டு 14 போட்டிகளில் 99 பவுண்டரிகள் அடித்த ஹேலி மேத்யூஸை அவர் கடந்தார்.
மொத்தமாக, இந்த ஆண்டு 104 பவுண்டரிகளை அடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 13 பவுண்டரிகள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.