கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! திருப்பி வழங்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

ஐ போன் மீண்டும் வழங்கப்படுமா? என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

sekar babu

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது தவறுதலாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்துள்ளது.

ஐபோன் உண்டியலில் விழுந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகாரும் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

எனவே, இந்த நேரத்தில் நாம் சென்று நம்மளுடைய ஐபோனை கேட்டால் நிச்சியமாக கிடைத்துவிடும் என ஆசையுடன் உண்டியல் திறந்த தகவலை அறிந்து  தினேஷ் கோவிலுக்கு நேரடியாக வந்து தன்னுடைய ஐபோனை திருப்பி தரும்படி கேட்டார். அங்கு தான் அவருக்கு பெரிய டிவிஸ்ட் கலந்த அதிர்ச்சியே காத்திருந்தது என்று சொல்லலாம். ஏனென்றால், போனை கேட்ட தினேஷிடம் கோயில் நிர்வாகம் கோயில் உண்டியலில் விழுந்த அனைத்து பொருட்களும் முருகனுக்கு சொந்தமானது என கூறியுள்ளனர்.

இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த தினேஷ் என்னங்க இப்படி சொல்றீங்க? என அப்படியே ஷாக் ஆகி நின்றார். அதன்பிறகு உங்கள் டேட்டாக்களை காப்பி செய்து கொள்ளுங்கள் மற்றபடி போன் தரமுடியாது எனவும் கோவில் நிர்வாகம் கூறிவிட்டனர்.  இதனை தொடர்ந்து உடனடியாக தினேஷ்  சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் மனு அளித்துள்ளார்.

அவர் கொடுத்த அந்த மனுவின் அடிப்படையில், அதற்கான விசாரணை சரியாக நடத்தப்பட்டு செல்போனை ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறி அவரை அனுப்பி வைத்தது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” இதற்கு விதிவிலக்கு உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu