திடீரென உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.56,320க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அது ரூ.56,800ஆக உள்ளது. மேலும், நேற்று ரூ.7,040க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.60 உயர்ந்து ரூ.7,100ஆக விற்கப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.