மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!

மின்சார திருட்டு தொடர்பாக சம்பலில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரஹ்மானுக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Zia ur Rehman

டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த சில நாட்களாவே சம்பல் தொகுதியில் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில், இவரது வீட்டில் நேற்று மின்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முறைகேடுகளை துறை கண்டறிந்தது. பர்க்கின் வீட்டில் உள்ள சுமை அவரது இணைப்பின் வாட்டேஜை விட அதிகம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது மின்வாரிய அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து ​​எம்பி ஜியா உர் ரஹ்மான் மீது, மின்சார சட்டம், 2003, பிரிவு 135 (மின்சார திருட்டு அல்லது அங்கீகரிக்கப்படாத மின்சாரம் பயன்படுத்துதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்திருந்தது. சோதனை செய்தபோது 2 மின் இணைப்பு மீட்டர்கள் 6 மாதங்களாக ஓடாதது தெரியவந்தது. மேலும் அதன் மீட்டர் சீல்களும் உடைக்கப்பட்டிருந்தன.

50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், டீப் ஃப்ரீசர், 3 ஸ்பிலிட் ஏசிகள், என உள்ளிட்ட பல கனரக மின்சாதனங்கள் வீட்டில் இருந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களில், அந்த இரண்டு மீட்டர்களிலும், ஜீரோ யூனிட் மின் கட்டணம் மட்டுமே இருந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து,  அவருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், வீட்டின் மின் இணைப்பு துண்டித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து அவருக்கு ரூ.1.91 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், சோதனை செய்திகொண்டிருந்த சமயத்தில் ஜியாவுர் ரஹ்மான் தந்தை மம்லுக்-உர்-ரஹ்மான் பர்கேவு அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 352 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 351-2 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 132 (ஒரு பொது ஊழியரைத் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) ஆகியவற்றின் கீழ் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்