சம்மதம் தெரிவித்தார் கமல்..!!
சவாலான படங்களில் ஆர்வமாக நடித்துவரும் வரலட்சுமியின் புதிய படத்தின் தலைப்பிற்கு கமலின் அனுமதிக்காக காத்திருந்த படக்குழுவினருக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி அடுத்து ஜே.கே.இயக்கத்தில் பார்வை திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்த படத்துக்கு முதலில் ‘ராஜபார்வை’ என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள்.
ஆனால் கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு ஆரம்பமாகியது.
ஆனால், தற்போது இந்த தலைப்புக்கு கமல் அனுமதி வழங்கியுள்ளார். இந்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
கதாநாயகி பாத்திரங்களை மாத்திரம் தேடிச் செல்லாமல் சவாலான வேடங்களை துணிச்சலாக பொறுப்பேற்று நடித்துவரும் வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.அந்தவகையில், தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு இணையாக கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கும் நடிகையாக வரலட்சுமி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
DINASUVADU