எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Satellite IR animation from INSAT 3DR (20.12.2024 0315-0945 IST) showing convective clouds associated with the well marked low pressure area over westcentral & adjoining southwest Bay of Bengal.
The system is likely to continue to move nearly northwards and concentrate into a… pic.twitter.com/AvKs43xeuv
— India Meteorological Department (@Indiametdept) December 20, 2024
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனிடையே, மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என டெல்டா வெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது, அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மத்திய வளைகுடாவில் நின்று கொண்டே இருக்கும் எனவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ள அவர் இது குறித்த விரிவான வானிலை அறிக்கை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
The well marked low pressure area off west central Bay of Bengal has intensified into a depression.
Unlikely to impact #Tamilnadu, it will keep stalling off west central bay for next 2 days. Later likely to impacted by dry air & come back to Tamilnadu with the empty shell.…
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) December 20, 2024