தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,683-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 குறைந்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.56,320-க்கும, கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 10 நாள்களில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,683-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.98க்கும், கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.