சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Train Gummidipoondi

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்த, எண்ணூர் – திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த சிக்கல் விரைவில் சீர் செய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori