டிச 22 உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?
தமிழகத்தில் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டால் பயப்படும் அளவுக்கு மழை இருக்காது மிதமான மழைக்கு தான் வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையமும் அதை தான் தெரிவித்திருக்கிறது.
20-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.