“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளிவிட்டார். அவர் என் மீது விழுந்ததால் நான் கிழே விழுந்தேன் என பாஜக எம்பி கூறியுள்ளார்.

Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நாடாளுமன்ற வளாகத்தில் தவறி விழுந்துள்ளார். இவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. இந்த எதிர்பாரா சிறு விபத்து குறித்து அவர் ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை தள்ளிவிட்டார். அந்த எம்பி என்மீது விழுந்தார். அதனால் நான் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தேன்.” எனக்கூறினார். அப்போது அவர் தலையில் ஒரு பெண் துணியை வைத்து அழுத்தி பிடித்திருந்தார்.

இன்று அமித்ஷா பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகளும், காங்கிரஸ் கட்சி அமித்ஷா கூறியதை திரித்து பேசுகிறது என காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக எம்பிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இன்று, அமித்ஷா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி அமளி காரணமாக மக்களவை தொடங்கியவுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்