ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி புயலால் கிட்டத்தட்ட 500 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது,
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்தது, சில இடங்களில் கட்டிடங்கள் சரிந்தது. தண்ணீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
புயலின் தாக்கம் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்களில் ஏற்பட்ட காரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த புயலின் காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையின் ஆபத்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது. பல குடியிருப்பாளர்களுக்கு இப்போது தங்குமிடம் இல்லை. 27 கல்வி நிலையங்கள் 9,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயலின் காரணமாக உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மொசாம்பிக் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததுள்ளது.300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இன்னும் யாரேனும் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளார்களா? எனவும், வீடுகளில் யாரவது சிக்கி இருக்கிறார்களா? என்பது பற்றியும் மீட்பு படை துறையை பணியை மேற்கொண்டு வருகிறது. புயலில் சிக்கி 45