எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது.!
2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது சாகித்திய அகாதமி விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.
தற்பொழுது, மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 ஆய்வு’ நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் ஆய்வாளர்களுள் ஒருவர். இவர், புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாடடுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.