இன்றும் குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு??
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,785-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த சில நாட்களாக உச்சம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்து ரூ.57,080 ஆக உள்ளது. நேற்று ரூ.7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.15 குறைந்து ரூ.7,135க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,785-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கடந்த ஐந்தாம் நாளாக இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.100க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனையாகிறது.