என்னங்க இது? விடுதலை 2 படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? வெட்டி தூக்கிய சென்சார் குழு!
விடுதலை 2 சென்சார் போர்டு வெளியிட்டுள்ள மாற்றங்களில் இந்த படத்தின் நேரம் 2 மணி 57 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது போல இருக்கும் என்பதாலே அதனை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறனும் தன்னுடைய படங்களில் வைத்துவிடுகிறார். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிறகு அதிகாரிகளும் அதனை தூக்கி விடுவார்கள்.
அப்படி தான் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தினை சென்சார் அதிகாரிகள் பாத்துட்டு படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா? என அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக மியூட் செய்து ஒளிபரப்ப சென்சார் குழு உத்தரவும் போட்டுள்ளது. அது மட்டுமின்றி, சில காட்சிகளையும் சென்சார் குழு படத்திலிருந்து தூக்கியுள்ளது.
படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெயரை வைத்து காட்சிகள் வந்துள்ளது. அதனை அகற்றவேண்டும் அல்லது மாற்றவேண்டும் என கூறியுள்ளது. அதைப்போல, சமூகத்தை வைத்து பேசும் ஒரு வசனத்தையும் படத்தில் இருந்து சென்சார் குழு வெட்டி தூக்கியது. அது மட்டுமின்றி, உண்மையான அரசியல் அமைப்புகளைப் பற்றிய குறிப்புகளை, திரைப்படத்தில் எங்கு காட்டினாலும் அதை மாற்றவும் படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்திலிருந்து வெளியான டிரைலர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதில் தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது’ என்ற அழுத்தமான வசனங்களை வைத்து இருந்தார். எனவே, வழக்கம் போல இந்த வெற்றிமாறன் படமும் பேசப்படும் என தெரிகிறது .