டி20 தொடரில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகின்றன.
பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தென்னாப்பிரிக்காவின் பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடக்க ஆட்டத்துடன் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி 05:30க்கு தொடங்கவுள்ளது.
டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் வெற்றியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றயை போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
பாகிஸ்தான் அணி:
கேப்டன் ஐடன் மார்க்ரம் தலைமையிலான அணியில், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான்(w/c), உஸ்மான் கான், சல்மான் ஆகா, இர்பான் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது, முகமது ஹஸ்னைன், தயப் தாஹிர், சுஃபியான் முகேம் ஆகியோர் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணி:
கேப்டன் ஐடன் மார்க்ரம் தலைமையிலான அணியில், ரியான் ரிக்கெல்டன், டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷாம்சி. பார்ட்மேன், குவேனா மபாகா ஆகியோர் உள்ளனர்.