ரெய்டுக்கு பயந்து பாஜகவின் திட்டங்களை ஆதரித்த கோழைதான் இபிஎஸ் – அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவிப்பதில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy kn nehru

சென்னை : கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். என அடுக்கடுக்காக திமுகவை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைச்சர் பேசி வருகிறார்கள். குறிப்பாக, அமைச்சர் ரகுபதி மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

அவரைத்தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெனாலி பயபட்டியலை விட பழனிசாமி பயப்பட்டியல் பெரியது எனவும், பாஜகவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் ” பாஜக-வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என்றும் சொல்லி ’கோழைசாமி’ பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம். இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு. அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு. முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது. முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.

நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.  இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்.

பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறாரா? அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது” எனவும் காட்டத்துடன் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested